தமிழீழ விடுதலைப் புலிகள் நாட்டில் மீள ஒருங்கிணைவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்தள்ளது.
புலிகள் மீள ஒருங்கிணைவதாக அரசாங்கம் செய்து வரும் பிரச்சாரம் அடிப்படையற்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இன சமூகங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் குற்றச் சாட்டுக்கள் முற்று முழுதாக பொய்யானவை என அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் எந்த மாணவருக்கும் புலிகளுடன் தொடர்பு கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலிகளுடன் தொடர்புகளைப் பேணுவதாகவும், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் சிங்கள மக்கள் நம்ப வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கமே இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டு வருவதாக tna பேச்சாளார் சுரேஸ் பிரேமசந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire