lundi 17 décembre 2012

இலங்கைக்கு மாகாண சபை முறைமை சிறந்தது !திஸ்ஸ விதாரண


மாகாண சபைகளை இரத்துச் செய்து விட்டால், சர்வதேசம், சிறுபான்மை இனங்களை ஏமாற்றி விட்டு, அவர்களை அடக்கி ஆழ முயற்சிப்பதாக கூறும். மாகாண சபை முறையில் காணப்படும் குறைகளை நிவர்த்தி செய்து மாகாண சபைகளை வலுப்படுத்துவதன் மூலம் மாத்திரமே இலங்கையில் உள்ளவர்கள் ஒரே தேசிய இனமாக வாழ முடியும். இதன் மூலம் பிரிவினைவாதத்தையும் தோற்கடிக்க முடியும் என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாகவே, விடுதலைப்புலிகளை தவிர அரசாங்கத் திற்கு எதிராக போராட்டம் நடத்திய ஏனைய அனைத்து தமிழ் ஆயுத அமைப்புகளும் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து கொண்டதாகவும் இதனை மாற்றுமாறு கோரி சில அரசியல்வாதிகள் மேற்கொண்டு வரும் ஆர்ப்பாட்டங்கள் மூலம் அவர்களுக்கு தவாறான செய்தி வழங்கப்படும் மாகாண சபை முறைமை நாட்டுக்கு தேவையான ஒன்றல்ல எனவும் அது இந்திய – இலங்கை உடன்படிக்கை ஊடாக இலங்கைக்குள் திணிக்கப்பட்டது என அரசியல்வாதிகள் கூறினாலும், முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவும் மாகாண சபை முறை இலங்கையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்.
சமசமாஜ கட்சி என்ற வகையில் மாகாண சபை முறைமை இரத்துச் செய்யப்படுவதை நாங்கள் எதிர்க்கின்றோம். அதிகார பரவலாக்கலை கீழ் மட்டத்தில் உள்ள கிராமங்கள் வரை கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது கட்சி அன்று முதல் குரல் கொடுத்து வருகிறது. இலங்கைக்கு மாகாண சபை முறைமை சிறந்தது என இலங்கை அரசியல் தலைவர்கள் நிலைப்பாடுகளை கொண்டிருந்த போதே மாகாண சபை முறைமை அமுல்படுத்தப்பட்டது எனவும் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்

Aucun commentaire:

Enregistrer un commentaire