புனர்வாழ்வு பெற்று வரும் 313 முன்னாள் புலி உறுப்பினர்கள் தைப்பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13ம் திகதி சமூகத்துடன் இணைக்கப்படவிருப்பதாக புனர்வாழ்வுக்கு பொறுப்பான ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். சுமார் ஒரு வருட கால புனர்வாழ்வு பயிற்சியை முடித்துக் கொண்ட மேற்படி 313 ஆண்களே தமது குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கப்படவிருப்பதாகவும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார். இதன்படி, மருதமடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 220 பேரும் சேனபுர புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 23 பேரும் கத்தகாடு புனர்வாழ்வு நிலை யத்திலிருந்து 70 பேருமாக 313 முன்னாள் புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் இணைக் கப்படுகின்றனரெனவும் அவர் கூறினார். 14ம் திகதி கொண்டாடப்படவுள்ள தைப் பொங்கலை முன்னிட்டு இவர்கள் ஜனவரி 13ம் திகதியன்று வவுனியா கலாசார மண் டபத்தில் வைபவரீதியாக குடும்பத்தாருடன் ஒப்படைக்கப் படவுள்ளனர். இந்நிகழ்வில் சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.சமூகத்துடன் இணைக்கப்படும் புனர் வாழ்வு பெற்றோருக்கென விசேட கடன் திட்டமொன்றும் சிபாரிசு செய்யப் பட்டுள்ளது. இவர்கள் சுயதொழிலை ஆரம்பிப்பதற்கென ஆகக்கூடியது 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வரை கடன் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கென ஆகக்குறைந்தது 4 சதவீத வட்டியே அறவிடப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இவர்கள் தமது தனிப்பட்ட காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்வார்களாயின் அரசாங்க அதிபர் அலுவலகங்களில் இதற்கென விசேடமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள சமூக-பொருளளதார மற்றும் நலன்புரி இணைப்பு அலுவலகங்களினூடாக தமது விடயங்களை தடையின்றி முன்னெடுக்க முடியுமெனவும் பிரிகேடியர் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire