அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெற்ற யுத்தத்தினால் பலர் கணவனை இழந்த நிலையில் தமது வாழ்க்கையினைக் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதன்படி நிலமைகளில் வடக்கு மற்றும் கிழக்கில் 89 ஆயிரம் பெண்கள் தமது கணவனை இழந்து பொறுப்புக்களுடனும் சுமையுடனும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும் பலர் கணவன் உயிரோடு இருக்கின்றாரா இல்லையா என்றே தெரியாது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனித்து நின்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.
இதில் இளவயதுத் திருமணம் மிகவும் முக்கிய பங்கினை வகிக்கின்றது. தொடர்ந்து யுத்தத்தில் உயிரிழந்தவர்கள், காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் என்ற ரீதியில் கணவனை இழந்த விதவைகளே அதிகமானவர்களாக உள்ளனர்.
அத்துடன் இந்த நாட்டில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது மிகவும் அருகிய நிலையிலேயே காணப்படுகின்றது. தனிய ஒரு இடத்திற்கு போன முடியாது. துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
தற்போது பெண்கள் மட்டும் அல்ல ஆண்களும்
Aucun commentaire:
Enregistrer un commentaire