பிரபாகரன் வருவார் என்ற கனவில் மாணவர்களை வழிநடத்தினார்கள்
பிரிகேடியர்கள் சொலமன் - தர்ஸானந்- இயக்கினார்கள் - நெடியவன் -
ருத்ரகுமாரன் - விநாயகம்
பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தை திறப்பதாயின் அது மூடியே இருக்கட்டும் என யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்தால் மட்டுமே பல்கலைக்கழகத்தை திறப்பதாயின் அது மூடியே இருக்கட்டும் என யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று காலை வடக்கின் யாழ் பலாலி இராணுவத்
தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதனை அறுதியிட்டு கூறியுள்ளார
மஹிந்த ஹத்துருசிங்க.
பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி
அரியரத்னத்துடன் கூட்டத்தில் சமூகமளித்திருந்த ஒரு சில பீடாதிபதிகள்
விரிவுரையாளர்கள் மற்றும் 4 மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் கருத்து
வெளியிட்ட அவர் பிரபாகரன் வருவார் மீண்டும் ஈழவிடுதலைப்
போராட்டத்தை நடத்துவார் என்ற கனவில் கைது செய்யப்பட்டு தடுத்து
வைக்கப்பட்டுள்ள மாணவர்களான சொலமன் தர்ஸானந் ஆகியோர் மாணவர்களை வழிநடத்திய
பிரிகேடியர்கள் எனவும், இவர்களை நெடியவன் - விநாயகம் - ருத்ரகுமாரன்
ஆகியோரின் கும்பல்கள் பின்னிருந்து இயக்குவதாகவும் கடுமையான தொனியில்
தெரிவித்ததாக கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் குளோபல் தமிழ்ச்
செய்திகளிற்கு தெரிவித்தனர்.
இந்த நிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட
பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிலர் மஹிந்த ஹத்துருசிங்கவுடன் கடுமையான
வாக்குவாதத்தில் ஈடுபட்டு 1983ன் பின்னான இலங்கையின் இனப்பிரச்சனை குறித்த
குறுக்கு வெட்டு முகத்தை தெளிவுபடுத்திய போதும் அவற்றை கணக்கில் எடுக்காத
அவர் காலில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்ட 4 மாணவரின் பெற்றோர்களையும்
வெளியேற்றி புனர்வாழ்வுக்கு முன்னர் மாணவரின் விடுதலை என்ற பேச்சிற்கே
இடமில்லை எனத் தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலர் கோத்தாபய
ராஜபக்ஸவின் நேரடியான அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவே இந்த நடைமுறை
பின்பற்றப்பட்டதாக இராணுவத்தின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
Aucun commentaire:
Enregistrer un commentaire