இலங்கையில் கடந்த ஒன்பது மாதங்களில்2 ஆயிரத்து 704 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதில் 2 ஆயிரத்து 92 பேர் ஆண்களும் 612 பேர் பெண்களுமாவர். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் தற்கொலை செய்வோர் வீதம் அதிகரித்துள்ளது என பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. தற்கொலைச் சப்வங்களில் தூக்கில் தொங்குதல் மற்றும் விஷம் அருந்தி உயிர் நீத்தலே அதிகமாகவுள்ளது.
மன அழுத்தம், சமூக தொடர்பின்மை மற்றும் அறியாமை போன்ற காரணிகளாலேயே கூடுதலான தற்கொலை தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire