கொழும்பில் நாகபாம்புடன் நடனமாடிய பெண்ணிடம் அவரது பாம்பு விடுதலை
கொழும்பில் நாகபாம்புடன் நடனமாடிய பெண்ணிடம் அவரது பாம்பு இன்று கையளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கிணங்க தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் வைக்கப்பட்டிருந்த மேற்படி நாகபாம்பை அப்பெண் இன்று அடையாளம் காட்டியதை அடுத்து அது கையளிக்கப்பட்டுள்ளது. மிருகக்காட்சிசாலையில் வைத்து குறித்த பாம்பை பெற்றுக்கொண்ட பெண்ணின் படம்.அத்துடன்
பல்கலைக்கழக மாணவர்கள் வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றம் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 மாணவர்கள் வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயந்த், விஞ்ஞான பீட மாணவன் எஸ்.சொலமன் ஆகிய நால்வருமே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் வவுனியா அலுவலகத்தில் இருந்து வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
Aucun commentaire:
Enregistrer un commentaire