
எனது கணவர் மகாதேவன் காரை எடுத்துக்கொண்டு வெளியே புறப்பட்ட போது பேட்டரியை மாற்றுவதற்கு செல்வதாகத்தான் சொல்லிவிட்டுச் சென்றார்.
என்னால் நம்ப முடியவில்லை, நானும் கோட்டூர்புரம் பாலத்துக்கு ஓடிச் சென்றடைந்தபோது அவரை, தீயணைப்பு வீரர்கள் தேடிக்கொண்டிருந்தனர்.
அதற்குமேல் என்னால் அங்கு நிற்கமுடியவில்லை. எப்படியும் அவர் உயிரோடு நல்லபடியாக வருவார் என்றுதான் நினைத்திருந்தேன்.
ஆனால், அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அவர் எதற்காக இந்த முடிவை எடுத்தார்? என்று என்னால் சொல்லமுடியவில்லை.
எனது கணவர், அவரது தாயார் சாந்தா மீது அதிகமாக பாசம் வைத்திருந்தார்.
கடந்த ஏப்ரல் மாதம் 18ம் திகதி எனது மாமியார் சாந்தா இறந்துபோன சோகம், கணவரை மனதளவில் மிகவும் பாதித்துவிட்டது.

தாயாரை பறிகொடுத்த சோகம்தான் அவரை இந்த முடிவுக்கு தள்ளிவிட்டது என்று நான் நினைக்கிறேன்.
மற்றபடி தனிப்பட்ட முறையில் அவருக்கும், எனக்கும் எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire