இரா. சம்பந்தன் அவர்கள் தமது உரையில் மேலும் புலிகள் இருந்த காலங்களில் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குச் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் கிடைக்க வில்லை. தற்போது எமது சுதந்திரமான கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் புண்ணியம் கிடைக்க வேண்டும். இன்று புலிகளை அழித்துவிட்டோம் என்று யார் யாரோ கூறிக்கொள்கின்றனர். புலிகளை எவரும் அழிக்கவில்லை. அவர்கள் தம்மைத்தாமே அழித்துக் கொண்டனர். ஜனநாயகத்தையும், தார்மீகத்தையும், மனித உரிமைகளையும் கடைப்பிடிக்கத் தவறியதாலேயே புலிகள் அழிந்து போனார்கள்.
இலங்கையின் வட பகுதியில் இருந்து இராணுவ முகாம்களை முழுமையாக அகற்றவேண்டும் என்றோ, இராணுவம் வெளியேற வேண்டும் என்றோ நான் ஒருபோதும் கூறியதில்லை. வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர் தங்களின் வரையறைக்குள் இருந்து செயற்படவேண்டும் என்றுதான் கூறினேன். தமிழர் பகுதிகளில் அவர்கள் புலனாய்வு செய்யலாம், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் அவர்கள் எமது மக்களின் வாழ்விற்கு இடையூறாக இருப்பதைத்தான் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார். புதிதாக ஜனநாயகத்திற்கு விளக்கமளிக்கும் இரா சம்பந்தன்.
இன்று சம்பந்தன் பாராளுமன்றத்தில் உரைநிகழ்த்துவதற்கான வாய்ப்பினை எவ்வாறு அவர் பெற்றார் என்பதனை இவ்வழவு விரைவாக அவர் மறந்தமைக்கான காரணமென்ன (1989, 1994, 10.10.2000) ஆகிய தேர்தல்களில் படுதோல்வியடைந்த சம்பந்தன் 2001ல் இடம்பெற்ற தேர்தலில் பிரபாகரனின் பாதங்களில் நமஸ்காரம் செய்தமையைத் தொடர்ந்தே அவருக்கு மீண்டும் திருமலை மாவட்டத்தில் புலிகளின் ஆயுததாரிகளால் அளிக்கப்பட்ட கள்ள வாக்குகள்மூலம் பாராளுமன்றம் செல்ல முடிந்தது. அதன் தொடர்ச்சியாகவே (ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சக்கரையாம்) என்னும் முது மொழிக்கமைய சம்பந்தன் தமது பதவியை தக்கவைத்துக் கொண்டிருக்கின்றார் என்பதனை அவருக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றோம்
Aucun commentaire:
Enregistrer un commentaire