வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு ஆணையாளர் உப அலுவலகங்களில் இது குறித்து முறைப்பாடு செய்யுமாறு அவ் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளிற்கு, ஏனைய முன்னாள் போராளிகள் தொந்தரவு கொடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இவ்விடயம் குறித்து அத தெரண, புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் தர்சன கெட்டி ஆராச்சியை தொடர்பு கொண்டு கேட்டது.
இதன்போது அவர் முன்னாள் போராளிகள் பிரச்சினைகளை எதிர்கொள்வார்களாயின் புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகங்களில் முறையிடுமாறு தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire