ஐக்கிய இராட்சியத்தை தளமாக கொண்டியங்கும் பிரிட்டன் விமான சேவை(எயாவெய்ஸ்) நிறுவனமொன்று, நிபுணர்கள் குழுவிடம் 2013 இல் சுற்றுலாப் பிரயாணத்தை மேற்கொள்ளக்கூடி சிறந்த 13 தளங்களை அட்டவணையிடுமாறு வேண்டியுள்ளது. இதற்கமைய நிபுணர்கள் பல தரவுகளை பயன்படுத்தி அடுத்த வருடத்திற்கான கவர்ச்சிகரமான இடங்களை பெயரிட்டுள்ளனர்.
13 முன்னணி சிறந்த சுற்றுலாத்துறைத் தளங்களில் இலங்கை முதல் இடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2009 யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது முதல் துரித கதியில் இலங்கை முன்னேறி வருவதாகவும், கவர்ச்சி மிகுந்த கடற்கரைகள், யானைச் சவாரி மற்றும் பாரிய அளவிலான யுனஸ்கோ உலக பராம்பரிய தளங்கள் போன்ற பல இடங்கள் இலங்கையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக் கணக்கெடுப்பில் ரியோ டி ஜெனிரோ இரண்டாம் இடத்திலும், தென் கொரியாவில் சியோல் மூன்றாம் இடத்திலும் உள்ளது.
ஏனைய இடங்களில் குரோஷியா, வியட்நாம், டொமினி குடியரசின் புண்டா கானா, வடக்கு அயர்லாந்தின் டெர்ரி, அமெரிக்காவின் லாஸ் வேகாஸ், ஜோர்ஜியாவின் திபிலீசி, அமெரிக்காவின் சான் டியாகோ, கலிஃபோர்னியா, தென்னாபிரிக்காவின் கேப் டவுன், ஸ்பெயினின் எலிகன்டி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஸின் டுபாய் போன்றவை ஏனைய இடத்தில் உள்ளன.
Aucun commentaire:
Enregistrer un commentaire