samedi 15 décembre 2012

நீக்குங்கள். எங்கள் மீது ஏற்படுத்தப்பட்டுள்ள களங்கத்தை


வைத்தியரிடம் கதறியழுத இராணுவப் பெண்கள். ஒலிப்பதிவு இணைப்பு. 

அண்மையில் கிளிநொச்சியிலிருந்து இராணுவத்தில் இணைந்து கொண்ட தமிழ் பெண்கள் சிலர் உளவியல்ரீதியில் பாதிப்புக்கு உள்ளான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். கிளிநொச்சி வைத்தியசாலையில் மனோவியல் நிபுணர் ஒருவர் இல்லாத நிலையில் விசேட பணிப்புரைக்கமைய வவுனியா வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்குச் சென்று நோயாளிகளை பார்வையிட்ட மனோவியல் நிபுணர் டாக்டர் சிவதாசன் அவர்களிடம் அவ்யுவதிகள் தாங்கள் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தப்பட்டதாக ஏற்படுத்தப்பட்டுள்ள களங்கத்தை எவ்வாறாவது நீக்குங்கள் என்று மண்றாட்டமாக வேண்டியுள்ளனர். 

குறித்த பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் ஊடகங்களில் பல்வேறு வகையான செய்திகள் வெளியாகியிருந்தது. இது தொடர்பில் இவர்களுக்கு சிகிச்சை அளித்த மநோவியல் வைத்திய நிபுணர் டாக்டர் சிவதாசன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் இத்தகவலை வெளிப்படுத்தினார். 

இவர்கள் ஒருவகையான மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்திய வைத்தியர் அவர்கள் தொடர்ந்தும் தமது தொழிலை தொடரவே விரும்புகின்றனர் என்றார். 

மேலும் அவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமைக்கான சமிக்கைகள் எதுவும் தென்படுகின்றதா என் கேள்வியை கேட்டபோது, இக்கேள்வியை தான் ஒவ்வொரு நோயாளியிடமும் நேரடியாகவும் மறைமுகமாகவும் மிக நிதானமாக கேட்டபோதே அவர்கள் அவ்வாறான எந்தவொரு தொந்தரவுக்கும் ஆளாகவில்லை என்றும் இவ்வாறான செய்திகளினூடாக தம்மீது மேற்கொள்ளப்பட்டுள்ள களங்கத்தை நீக்குமாறு மன்றாடியதாக அவர் கூறினார். 

மனோவியல் நிபுணர் டாக்டர் சிவதாசனின் ஒலிப்பதிவை இங்கு அழுத்தி கேட்கலாம். 

1 commentaire: