கருத்துச் சுதந்திரம், தணிக்கை பற்றியெல்லாம் இன்று புதிய பல கேள்விகள் உருவாகிவிட்டன. ஒவ்வொரு மனிதனுக்கும் சுதந்திரம் இருக்கிறது; உரிமைகள் இருக்கின்றன – அடுத்தவரைப் பாதிக்காத வரையில். எல்லையற்ற சுதந்திரம் உண்டாக்கும் பாதிப்புகளை அறிந்து கொண்டுதான் தடைகளையும் விதிகளையும் மனிதகுலம் உருவாக்கிக் கொண்டது.
இன்றைய இணையத்தள வளர்ச்சியோடு கருத்துச் சுதந்திரம் கொடிகட்டிப் பறக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். சமூக வலைத்தளங்கள் இந்த அளவுக்கு வளர்ச்சி பெறும் என்றோ மக்களிடம் தவிர்க்க முடியாத அங்கமாக மாறும் என்று சில ஆண்டுகள் முன்புவரை யாரும் கற்பனை செய்துகூட பார்த்திருக்க முடியாது. இது செய்திப் பரவலில் ஏற்பட்டுள்ள பெரிய புரட்சி. மத்திய கிழக்கு நாடுகளில் புரட்சி வெடிப்பதற்கும் ஆட்சி மாற்றங்கள் நடப்பதற்கும் ஃபேஸ்புக் போன்ற இணைய தளங்களே காரணம் என்று ஆகிவிட்டன.
பழைய ஊடகங்களில், அதாவது அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் முன்தணிக்கை சாத்தியம். இந்தப் புதிய தொழில் நுட்பத்தின் தன்மை முன்தணிக்கையைச் சாத்தியமில்லாமல் செய்து விடுகிறது. எனவே இதில் பங்கு பெறுபவர்கள் மிகவும் சுதந்திரமாகத்தம் கருத்துக்களை எந்தத் தடையும் இன்றி உடனுக்குடன் பதிவேற்றம் செய்து, அது அடுத்த கணமே உலகெங்கிலுமுள்ள பார்வையாளர்களுக்குக் காணக்கிடைக்கிறது. எழுதுபவர்கள் உடனடி எதிர்வினையையும் பெறமுடிகிறது
Aucun commentaire:
Enregistrer un commentaire