vendredi 7 décembre 2012

சிறுவர்கள், இளைஞர்கள் உளரீதியாக காணமுடிகின்றது! .மாயன் நாட்காட்டி.


இம்மாதத்தில் பலரும் அச்சத்துடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் தினமாக 21 ஐக்குறிப்பிடலாம். அதாவது இத்தினத்தில் உலகம் அழிந்துவிடப்போவதாக பலர் தங்கள்கற்பனைத் திறனில் வெவ்வேறேன கதைகளைக் கூறிய வண்ணமுள்ளனர். ஒரு சிலஊடகங்களும் எவ்வித சரியான மூலகமும் இன்றி உலக அழிவு தொடர்பான செய்திகளைவெளியிட்டு வருகின்றனர். நாசாவே உலக அழிவு தொடர்பில் உறுதியாக கருத்து எதனையும்வெளியிடாத போதும் நாசாவை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடும் ஒரு சிலஊடகங்களையும்ஏராளமான தனிநபர்களையும் சமூகவலையமைப்புகளிலும்காணமுடிகின்றது.

மாயன் நாட்காட்டிஉலகம் இருளில் மூழ்கப்போகின்றதுநிபிறு என்ற கோள் பூமியுடன் மோதிஉலகத்தையே அழிக்கப் போகின்றது என்று கற்பனைத் திறனை புகுத்தி செய்திக்காகதொகுத்து வழங்கிக்கொண்டிருக்கின்றன ஒரு சில ஊடகங்கள்.


ஆனால் இவ்வாறான தகவல்களால் பலர் உளரீதியாகபாதிக்கப்பட்டுள்ளதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பில் தங்களுக்கு பல மின்னஞ்சல்கள் கிடைப்பதாகநாசாவின் ஏம்ஸ் ஆராய்ச்சி நிலையத்தின் வானுயிரியல்பிரிவின் ஆராய்ச்சியாளரான டேவிட் மொரிசன்தெரிவிக்கின்றார்பலர் தாங்கள் இத்தகைய செய்திகளால்உண்ண முடியாமலும்உறங்க முடியாமலும் தவித்துவருவதுடன் மன இறுக்கத்துக்கும் ஆளாகியுள்ளதாக மின்னஞ்சல்களில் குறிப்பிட்டுள்ளதாகடேவிட் மொரிசன் தெரிவித்துள்ளார்இத்தகைய வதந்திகளுக்கு மக்கள் பயப்பட வேண்டியதேவையில்லையெனவும் மொரிசன் வலியுறுத்தியுள்ளார்.ஆராய்ச்சியாளர்களின் தற்போதைய ஆய்வுகளின்படி, 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் உலகம் அழிவதாயின் எந்த எந்த வகையில் அழியலாம் என்பதை மிக நுணுக்கமாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் சொன்னபடி….,
1. சூரியன், பால்வெளி மண்டலத்தில் உள்ள கருப்புப் பள்ளத்தினாலோ (Dark Rift) அல்லது கருந்துளையினாலோ (Black Hole) ஈர்க்கப்பட்டு அழியலாம்.
2. பூமியின் வட, தென் துருவங்களுக்கு ஊடாகச் செல்லும் அச்சு இடம் மாறி (Pole Shift), பூமியின் காலநிலை மாற்றங்களினால் அழியலாம்.
3. விண்ணில் சுற்றித் திரியும் மிகப் பெரிய விண்கற்களில் (Asteroid) ஏதாவது ஒன்று தாக்கி பூமியில் அழிவுகள் ஏற்படலாம்.
4. பிளானெட் எக்ஸ் (Planet X) அல்லது நிபிரு (Nibiru) என்று சொல்லப்படும் கோள் தாக்குவதால் பூமி அழியலாம்.
5. சூரியனில் ஏற்படும் அதியுயர் மிகைவெப்பப் பாய்ச்சலால் உருவாகும் மின்காந்தக் கதிர்களின் தாக்கத்தால் பூமி அழியலாம்.
இப்படிப் பல விதங்களில் பூமி அழியும் என்று அவர்கள் சொன்னாலும், அவற்றில் சில உண்மையாகவே நடப்பதற்குச் சாத்தியங்கள் இருப்பதாக விஞ்ஞானிகளில் பலர் இப்போது சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக, அந்த அழிவுகளில் மிக முக்கியமாக சொல்லப்படுவது சூரியனின் மின்காந்தக் கதிர்த் தாக்குதலைத்தான்.இவற்றில் எல்லாம் எந்த அளவுக்கு உண்மை உண்டு, எந்த அளவுக்குப் பொய் உண்டு என்பதைச் சாதாரணமான மக்களுடன் பகிர்ந்து கொள்ள, எந்த நாட்டு அரசுகளும் முன்வரவில்லை. நாட்டின் நலன்களும், நாட்டு மக்களின் நலன்களும்தானே அரசுகளுக்கு முக்கியம். அப்படி இருக்க ஏன் அரசுகள் இவற்றைச் சொல்லத் தயங்குகின்றன? உண்டு, இல்லை என்பதை மிகத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டியதுதானே! ஏன் இன்றுவரை எந்த அரசும் இது பற்றி தன் வாயைத் திறக்கவே இல்லை? மக்கள் இவற்றை அறியக் கூடாது என இந்த அரசுகளைத் தடுப்பது யார்?

Aucun commentaire:

Enregistrer un commentaire