சிறிலங்கா விமானப்படைத் தலைமையகத்தில் இந்தப் பேச்சுக்கள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகியிருந்தன.
இந்திய விமானப்படையின் நடவடிக்கைத் தலைமையக உதவித்தளபதி எயர் வைஸ் மார்சல் உப்கர்ஜித்சிங் தலைமையில் 5 அதிகாரிகள் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றனர்.
சிறிலங்கா விமானப்படையின் தரப்பில் நடவடிக்கைப் பணிப்பாளர் எயர் மார்சல் புலத்சிங்கள தலைமையில் 6 அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்திய – சிறிலங்கா பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் உடன்பாட்டின் கீழ், இருநாட்டு முப்படைகளினதும் அதிகாரிகள் மட்டத்தில் ஆண்டுதோறும் இத்தகைய பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire