1998 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படும் லயன் எயார் விமானத்தில் பயணித்து இறந்தவர்களின் சடலங்கை பூநகரி பிரதேசத்தில் புதைக்கப்பட்டன. இதில் 31 பேரின் உடற் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2011 ஆம் ஆண்டு மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் தந்த தகவலில் அடிப்படையிலேயே இந்த விமானத்தில் இறந்தவர்களின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்திருந்தது.
இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை குறித்த மேலதி விசாரணைகள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் அனுமதி பெற்று தற்போது நடைபெறுவதாகவும், அதனடிப்படையிலேயே இந்த தேடுதல் நடப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட குறித்த விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபரே இந்த அண்டனோவ் 24 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் விமானம் தாக்கப்பட்ட போது அதில் 48 தமிழ் சிவிலியன்களும், விமான சிப்பந்திகள் 7 பேருமாக மொத்தமாக 54 பேர் கொல்லப்பட்டனர்.
பலாலி விமானநிலையத்தில் இருந்து கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தை நோக்கி பறந்துகொண்டிருந்தபோதே அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இரணைதீவு கடற்கரையில் இருந்து வடக்காக 4 கடல் மைல்கள் தொலைவில் அந்த விமானம் வீழ்ந்தது.
அதில் 33 பேரின் சடலங்கள் பொதுமக்களாலும், கிராம அதிகாரிகளாலும் மீட்கப்பட்டு கௌதாரிமுனை என்ற இடத்தில் புதைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

Aucun commentaire:
Enregistrer un commentaire