புதுடெல்லி, டிச. 4-தமிழகத்தில் சம்பா சாகுபடிக்கு கர்நாடக அணையில் இருந்து தண்ணீர் திறப்பது தொடர்பாக இரு மாநில முதல்வர்கள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று, இரு மாநில அணைகளிலும் உள்ள நீர் இருப்பு மற்றும் தேவை பற்றி மாநில அரசுகள் அறிக்கை அளித்தன.
அதன் அடிப்படையில் திங்கட்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும், இந்த உத்தரவு தமிழக விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கு விசாரணை முடிவடையாத நிலையில் ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
நடுவர் மன்றம் அனுமதித்த அளவைவிட கர்நாடக அரசு அதிகமான பாசன நிலங்களை உருவாக்கியுள்ளது. மேலும் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரில் குடிநீர் தேவைக்கு மட்டும் 23 டி.எம்.சி. தேவை என்று கர்நாடக அரசு கூறுவது தவறு. தமிகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று கூறுவது சட்டத்திற்கு புறம்பானது. உடனே தண்ணீர் திறந்துவிடாவிட்டால் தமிழகத்தின் உணவு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் தமிழக வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்தின் வாதம் முடிவடைந்த நிலையில், வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire