புதுடெல்லி,டிச.22 - டெல்லியில் மாணவியை பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் மற்றும் மாணவர்கள், மாணவிகள் ஏராளமானோர் நேற்று ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். தலைநகர் டெல்லியில் கடந்த ஞாயிறு அன்று இரவு நேரத்தின்போது பஸ்சில் பயணம் செய்த மருத்துவக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதற்கு பாராளுமன்றத்தில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கண்டன பேரணி நடத்தி வருகின்றனர். நேற்று ஏராளமான பெண்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் மத்திய டெல்லியில் ரைசினா ஹில்ஸில் இருக்கும் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாக சென்றனர். பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை பார்த்ததும் ஜனாதிபதி மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். பேணியின்போது எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோஷமிட்டுக்கொண்டே ஜனாதிபதி மாளிகையின் இரண்டாவது வாயிலுக்கு முன்பு போய் நின்றனர். அப்போது மோட்டார் வாகனத்தில் வந்த அதிகாரியை தடுத்து நிறுத்தி ஜனாதிபதி மாளிகைக்குள் செல்ல எங்களுக்கு அனுமதி வேண்டும் என்று கோரினர். ஜனாதிபதியின் அலுவலக இல்லத்திற்குள் நுழைய பேரணியினர் முயன்றனர். பின்னர் எப்படியோ அவர்களை சமாளித்து இந்தியா கேட்டுக்கு அனுப்பிவைத்தோம் என்றும் போலீசார் தெரிவித்தனர். ஜனாதிபதி மாளிகையில் இருந்த பாதுகாவலர்கள் உறுதிமொழிதான் எடுத்தனர். ஆனால் வேறு எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பேரணியில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் கூறினார். டெல்லியில் கடந்த ஞாயிறு பாதிப்புக்குள்ளான மருத்துவக் கல்லூரி மாணவியும் அவரது நண்பரும் சினிமா பார்த்துவிட்டு இரவு நேர பஸ்சில் சென்றனர். அப்போது அந்த மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. அதை தடுக்கச் சென்ற நண்பரையும் அடித்து உதைத்ததோடு மாணவியையும் நண்பரையும் பஸ்சில் இருந்து அந்த கும்பல் தூக்கி எறிந்துவிட்டு சென்றுவிட்டது
Aucun commentaire:
Enregistrer un commentaire