‘நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கு பதிலளிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்க வேண்டும்’ என பிரதான எதிர்க்கட்சியின் கொறடா ஜோன் அமரதுங்க கூறினார். பாதுகாப்பு அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் பேசிய போதே ஜோன் அமரதுங்க எம்.பி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
‘ஸ்ரீ ஜயவர்தனபுறக்கோட்டையை நவீனமயமாக்கும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. முன்னாள் ஜனாதிபதி ஜயவர்தனவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கோட்டை அபிவிருத்தித் திட்டத்தை இப்போது பாதுகாப்பு செயலாளர் பூரணமாக்கி வருகின்றார். இது பாராட்டுக்குரிய விடயமாகும்.
நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் வினாக்களுக்கு பதிலளிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்க வேண்டும்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த சிரேஷ்ட அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பது எனக்கு தெரியும். இதனால் அவரது மகன் நாமல் ராஜபக்ஷவை பிரதி அமைச்சராக்க வேண்டுமென கூறுகின்றேன். அவ்வாறு செய்தால் விசுவாசம் தொடர்பான பிரச்சினைகளுக்கு இடமிருக்காது.
நாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களைத் தடுக்க பாதுகாப்பு அமைச்சு தவறியுள்ளது. சிறைச்சாலைகள் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் திட்டங்கள் பற்றி நான் கேள்விப்பட்டேன். அது தவறானது. சிறைச்சாலைகள் நீதியமைச்சின் கீழ் இருப்பதே முறை’ என அவர் சுட்டிக்காட்டினார்
Aucun commentaire:
Enregistrer un commentaire