


மற்றைய விடையம் என்னவென்றால், வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேறத் தேவையில்லை என்று இவர் தெரிவித்துள்ள கருத்து ஆகும். அதாவது மேற்குலகில் உள்ள பல நாடுகள், வட கிழக்கில் உள்ள இராணுவத்தை குறைக்கவேண்டும், இல்லையேல் அகற்றவேண்டும் என்று தெரிவித்து வருகிறது. ஐ.நா முதல் பல உலக அமைப்புகள், இக் கோரிக்கையை இலங்கை அரசிடம் முன்வைத்துள்ள நிலையில், தமிழர்களின் தலைவர் ஒருவர் இவ்வாறு ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளது அனைத்து உலகநாடுகளையும் வாயடைக்கச் செய்யும் விடையமாகும். தமிழர்களுக்காக பேசிவரும் உலக நாடுகளின் வாயை அடைக்க மகிந்தர், சம்பந்தரைப் பயன்படுத்துகிறாரா என்ற சந்தேகங்கள் தற்போது தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது. சம்பந்தர் விடுதலைப் புலிகளைப் பற்றி தரக் குறைவாகப் பேசியுள்ளார் என்று பலரும் கண்டனம் தெரிவிக்கும் இவ்வேளை, சம்பந்தன் மறைவாகச் சொல்லியுள்ள கருத்தையும் தமிழர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இவ்வாறு வஞ்சக நோக்கத்தோடு, தலைமையில் இருக்கும் சம்பந்தன் அவர்கள், உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமச் செய்யவேண்டும் ! மகிந்தரின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாக நாட்டியமாடும் இவர், இளைய தலைமுறையினருக்கு வழிவிட்டு இனியாவது ஒதுங்கிக் கொள்வது நல்லது. சம்பந்தர் விடுதலைப் புலிகள் தொடர்பாக தெரிவித்த கருத்தை கண்டித்து, புலம்பெயர் நாடுகளில் அவர் கொடும்பாவியை எரிக்க , உணர்வாளர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என்ற செய்திகளும் அதிர்வு இணையத்துக்கு கிட்டியுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire