mercredi 5 décembre 2012

பௌத்தத்தை வைத்து பிழைப்பு நாடாத்தும் சிங்கள வாதி பிரான்ஸ் நாட்டுக்கான பிரதான சங்க நாயக்கர் பரவாஹெர சந்தரத்தன தேரர்


5 பிள்ளைகளைப் பெறும் சிங்களக் குடும்பங்களுக்கு பணப்பரிசு - பரவாஹெர சந்தரத்தன தேரர்
 சிங்கள குடும்பங்களில் பிள்ளைகள் பிறப்பது குறைந்துள்ளதன் காரணமாக எதிர்காலத்தில் குறைந்தது 5 பிள்ளைகளை பெறும் சிங்கள குடும்பங்களுக்கு பணப் பரிசு வழங்கப்படும என பிரான்ஸ் நாட்டுக்கான பிரதான சங்க நாயக்கர் பரவாஹெர சந்தரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் அடுத்த வருடத்தில் இருந்து அமுலுக்கு கொண்டு வரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.  சிங்கள குடும்பங்கள் குழந்தைகளை பெற்றெடுப்பது குறைந்துள்ளதால், எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான நிலைமையை எதிர்நோக்க நேரிடும் எனவும் இந்த பாதிப்பு பௌத்த மதத்திற்கும் கெடுத்தியை உண்டுபண்ணும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள குடும்பங்களில் பிள்ளைகள் இல்லாது போனால், துறவறம் பூணவும் பிள்ளைகள் இல்லாமல் போகும் எனவும் இதனால், நேபாளம், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் உள்ள பௌத்தர்களுக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமையானது சிங்கள இனத்தின் பாரிய அழிவுக்கு வழிகோலும் என்பதால், தான் மேற்படி தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பரவாஹெர சந்தரத்தன தேரர் தெரிவித்துள்ளா

Aucun commentaire:

Enregistrer un commentaire