jeudi 6 décembre 2012

உயிரினங்கள் இருந்திருக்கலாம் என உருதிபடுத்துகிறது கிவ்ரியோ சிட்டி


செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ்வதற்காக தேவையான மித்தேன், ஹைட்டரஜன் மற்றும் நைட்ரஜன் போன்ற வாயுக்கள் காணப்படுவதாகவும் கிவ்ரியோசிட்டி விண்வெளி ஓட ஆய்வு தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நாஸா நிறுவனம் தெரிவிக்கின்றது. கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கென கிவ்ரியோசிட்டி விண்வெளி ஓடம் அங்கு சென்றடைந்தது.

2020 ஆம் ஆண்டில் மேலும் தொழில்நுட்ப ரீதியில் விருத்தி செய்யப்பட்ட விண்வெளி ஓடத்தினை செவ்வாய் கிரகத்திற்கு ஏவ இருப்பதாகவும் நாஸா நிறுவனம் தெரிவிக்கின்றது. கிவ்ரியோசிடடி விண்வெளி ஓட தகவல்களை அடிப்படையாக கொண்டு தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும் என்பதை உறுதிப்படுத்தப்படுத்துவதற்கும் உயிரினங்கள் தொடர்பான தகவல்களை கண்டறியும் நோக்குடன் புதிய விண்வெளி ஓடம தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் நாஸா நிறுவனம் தெரிவிக்கின்றது

Aucun commentaire:

Enregistrer un commentaire