lundi 10 décembre 2012

யாழ்பாணம் நோக்கிய மண்னிக்கவும். நிலவை நோக்கிப் பயணம்!


நாசாவின் முன்னாள் அதிகாரிகள் சிலர் இணைந்து நிலவுக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் பொருட்டு நிறுவனமொன்றினை ஆரம்பித்துள்ளனர். அந்நிறுவனத்திற்கு அவர்கள் 'கோல்டன் ஸ்பைக்' எனப் பெயரிட்டுள்ளனர்.
எனினும் இப் பயணத்திற்கான கட்டணம் தான் வாயை பிளக்கவைக்கின்றது. ஆம் இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் 1.5 பில்லியன் அமெரிக்கடொலர்களாகும். இது இருவருக்கான கட்டணமாகும்.
நாடுகள் மற்றும் அரசாங்கங்களை குறிவைத்தே இதனை ஆரம்பித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது. மற்றைய நாடுகள் ஆராய்ச்சி நோக்கத்திற்காக அல்லது தேசத்தின் பெருமைக்காக அங்கு செல்லலாம் எனவும் குறிப்பிடுகின்றது.
இந் நீண்ட தூர சவால் மிக்க பயணத்திற்கான உடைகள் மற்றும் சில உபகரணங்களைவேறு நிறுவனங்களிடம் தயாரிக்க ஒப்படைத்துள்ளதுடன் சிலவற்றை ஏற்கனவே இயங்கிவரும் விண்வெளி நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire