mercredi 5 décembre 2012

சுற்றுலா விசாவில் வியாபாரம் செய்வோர் கைது செய்யப்படுவர்

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்யும் நடவடிக்கை தொடர்வதாக பொலிஸ் தலைமையகம் நேற்று தெரிவித்தது.

இந்திய மற்றும் சீன பிரஜைகளே இவ்வாறான வியாபார முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சுற்றுலா வியாபாரிகள் வீதியோரங்களில் மட்டும் தமது தொழிலை செய்வதில்லை.

இவர்கள் தாம் தங்கியுள்ள அறை அல்லது வீட்டிலும் வியாபாரம் செய்கின்றனர்.

சீன பிரஜைகள் சிலாபம், நீர்கொழும்பு, கோட்டை, ஹம்பாந்தோட்டை மற்றும் கண்டி ஆகிய இடங்களில் வாசனை பொருட்கள், ஆடைகள், கையடக்க தொலைபேசிகள் மற்றும் சப்பாத்து ஆகியவற்றை விற்கின்றனர்.

இதேவேளை, சேலைகள், சல்வார்கள் மற்றும் சப்பாத்து என்பவற்றை இந்தியர்கள் கிழக்கு மாகாணத்தில் விற்பதாகவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது

Aucun commentaire:

Enregistrer un commentaire