dimanche 9 décembre 2012

தமிழக மீனவர்கள் 8 பேரை நடுக்கடலில் இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது

ராமேசுவரம், டிச. 9-ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்கள் சுமார் 3 ஆயிரம் பேர் 500 விசைப் படகுகளுடன் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்களில் சிலர் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது இலங்கை  கடற்படையினர் 5 குட்டி கப்பல்களில் 30 பேர் ரோந்து வந்தனர். அவர்கள் அங்கு மீன்பிடித்து கொண்டிருந்து ராமேசுவரம் மீனவர்களை பார்த்து இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது என்று எத்தனை முறை சொல்வது என்று மிரட்டினர். பின்னர் அவர்கள் மீனவர்களின் படகுகளில் ஏறி அங்கு இருந்த மீன் வலைகளை அறுத்து கடலில் வீசினர். படகில் இருந்த மீனவர்களையும் அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவர்கள் 2 படகுகளில் இருந்த 8 மீனவர்களை கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை கரை திரும்பிய மற்ற மீனவர்கள் ராமேசுவரம் மீனவர்கள் கடத்தப்பட்ட தகவல் குறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளனர். மீனவர்கள் கடத்தப்பட்டதால் ராமேசுவரம் மீனவர்கள் கவலை அடைந்து உள்ளனர். கடத்தப்பட்ட மீனவர்களை உடனே மீட்கக்கோரி ராமேசுவரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் தொடர்ந்து நீடித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire