jeudi 6 décembre 2012

13வது திருத்தம் குறித்து டக்ளஸ் தேவானந்தாவினால் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



13வது திருத்தம் குறித்து அமைச்சர் டக்ளஸ் அழைப்பில் நாளை விசேட கூட்டம்
நாளை (06) பிற்பகல் பாராளுமன்ற குழுக்கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், தென்பகுதியைச் சேர்ந்த முற்போக்கு மற்றும் இடதுசாரி பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு கிழக்கு உள்ளிட்ட முஸ்லிம் உறுப்பினர்கள், மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்க்கட்சி உறுப்பினர்கள், மற்றும் 13வது திருத்த அமுலாக்கத்தை வலியுறுத்தும் அமைச்சர்கள் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை தமிழ்பேசும் மக்களின் அரசியல் உரிமைப்பிரச்சினைக்கு 13வது திருத்தச்சட்டத்தை ஆரம்பமாகக் கொண்டு தீர்வுகாணப்படவேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பம் முதல் வலியுறுத்தி வந்ததுடன் அதன் அமுலாக்கத்திற்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தவர் என அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
.

Aucun commentaire:

Enregistrer un commentaire