சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் 80-வது ஆண்டு பிறந்த நாள் விழாவில் அவர் பேசுகையில்,இலங்கை தமிழர் பிரச்சினைக்கு 1961-ம் ஆண்டே ஐ.நா. சபைக்கு அண்ணா கடிதம் எழுதினார். இலங்கையில் உள்ள 25 லட்சம் தமிழர்களை அழிக்க நினைக்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அதில் கூறியிருந்தார்.இப்போது ஸ்டாலின், டி.ஆர்.பாலு மூலம் ஐ.நா. சபைக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியதை அமைச்சராக இருந்த ஒருவர் விமர்சனம் செய்துள்ளார். இது தான் விதண்டாவாதம். தமிழன் உருப்படாமல் போனதற்கு இது தான் காரணம்.
பிரபாகரன் ஆயுதம் ஏந்தி போராடிய போதே ஈழத்தமிழகம் அமைந்திருக்க வேண்டும். ஆனால் தமிழர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால் தான் ஈழத்தமிழகம் கிடைக்கவில்லை. எனவே ஈழத்தமிழகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக நானும், வீரமணி, திருமாவளவன் உள்ளிட்டோர் கொண்ட டெசோ அமைப்பு முயற்சித்து வருகிறது என்றார் அவ
Aucun commentaire:
Enregistrer un commentaire