jeudi 21 février 2013

அழுத்தங்களால் வட மாகாண சபைத் தேர்தலை செப்ரெம்பர் 07 ஆம் திகதி நடத்துவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.


அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜெனிவாக் கூட்டத் தொடரில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவும், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை இலக்கு வைத்துமே அரசு வட மாகாண சபைத் தேர்தல் திகதியை தீர்மானித்துள்ளது.

சர்வதேசத்தின் தொடர்ச்சியான அழுத்தங்களால் வட மாகாண சபைத் தேர்தலை செப்ரெம்பர் 07 ஆம் திகதி நடத்துவதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படவுள்ளது.
 
வட மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், கனடா உட்படச் சர்வதேச நாடுகள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதால் அழுத்தங்களுக்கு முகம்கொடுக்க முடியாத நிலையில் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
 
குறிப்பாக, அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜெனிவாத் தொடரில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கவும், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை இலக்குவைத்துமே அரசு வட மாகாண சபைத் தேர்தல் திகதியை தீர்மானித்துள்ளது.
 
இதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது என்றும் தேர்தல் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவிப்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது என்றும் நம்பகரமாகத் தெரியவருகிறது.
 
எனவே, வடக்குத் தேர்தல் அறிவிப்பை விடுப்பதற்கு ஜனாதிபதியின் கட்டளைக்காகத் தேர்தல் திணைக்களம் காத்திருக்கிறது என அறியமுடிகின்றது. ஏனெனில், இயங்காத சபை ஒன்றுக்கு அதாவது மாகாணசபையொன்றுக்கு முதன்முதலாகத் தேர்தல் நடைபெறும் போது அதற்கு ஜனாதிபதியின் உத்தரவு அவசியம்.
 
குறிப்பாக, 1988ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தின் 10 (1) உப பிரிவிற்கமைய ஏதேனுமொரு மாகாணத்திற்கு முதன்முதலாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படவுள்ள போது அத்தகைய தேர்தலொன்றை நடத்துமாறு ஜனாதிபதி தேர்தல் ஆணையாளருக்கு உத்தரவொன்றை பிறப்பித்தல் வேண்டும்.
 
இதற்கமைய வடமாகாணசபைத் தேர்தல் விடயத்தில் ஜனாதிபதியின் உத்தரவுக்காகத்  தேர்தல் திணைக்களம் காத்திருக்கின்றது.
 
குறிப்பாக, ஏனைய மாகாணங்களுக்கு ஏற்கனவே தேர்தல்கள் நடைபெற்றுள்ளதால் பதவிக்காலம் முடிவடையும்போது அல்லது அரசமைப்பின்படி ஆளுநர் குறித்த சபையைக் கலைத்தாலே தேர்தல் ஆணையாளரால் தேர்தலுக்குச் செல்லமுடியும்.
 
இங்கு ஜனாதிபதியின் உத்தரவு முக்கியம் பெறாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, வடக்குத் தேர்தல் செப்டெம்பரில் நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்திருந்தமை தெரிந்ததே.

Aucun commentaire:

Enregistrer un commentaire