vendredi 22 février 2013

மண்டையன் குழு தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

அண்மையில் வெளியாகியிருந்த பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்கள் தொடர்பில் கருத்துரைத்த முன்னாள் மண்டையன் குழுவின் தலைவர் 'பிரபாகரனின் மகனுக்கு உணவையும், தண்ணீரையும் கொடுத்துவிட்டு அடுத்த கணமே சுட்டுத்தள்ளியிருக்கும் இலங்கை இராணுவம், தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக கூறுவது நகைப்புக்குரியது' என்று கூறியிருக்கின்றார். 

வெளியாகியுள்ள படங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அப்படங்கள் உண்மையானவையா பொய்யானவையா என்பது தொடர்பில்இடம்பெறுகின்ற விசாரணைகளின் முடிவுகள் அதற்கு பதில்சொல்லும். குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும் என்பது எவரும் மறுக்க முடியாதது. 

ஆனால் இது தொடர்பில் சுரேஸ் பிறேமச்சந்திரன் கருத்துரைப்பதுதான் நகைப்புக்குரியது. இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்தபோது சுரேஸ் பிறேமச்சந்தின் தலைமையிலான மண்டையன்குழு எத்தனை பாலச்சந்திரன்களின் உயிர்களை குடித்துள்ளார்கள். மண்டையன் குழுவின் அட்டுளியங்களின் வடுக்கள் இன்றும் மக்கள் மனங்களை விட்டு நீங்காதுள்ளது. 

இந்நிலையில் 'வடக்கில் ஜனநாயக பூர்வமான ஆட்சி இல்லை, இராணுவ சண்டித்தனமே நிறைந்திருக்கின்றது. எங்கள் மண்ணில் நாங்கள் நிம்மதியாக வாழ அனுமதிக்கப்படும் வரை போராட்டம் தொடரும்' என்றும் கூறியிருக்கின்றார். 

மண்டையன் குழுவின் தலைவரே! இலங்கையில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்தபோது, உங்கள் தலைமையில் நின்ற மண்டையன்குழு வடக்கு மக்களுக்கு வழங்கியிருந்த ஜனநாயக உரிமைகள் பற்றியும் அக்காலத்தில் வாழ்தந்தவர்கள் அன்றிருந்த நிலைமை பற்றியும் இன்றுள்ள நிலைமை பற்றியும் விலாவாரியாக கூறுவார்கள். 

நீங்கள் போராட்டம் தொடரும் என்கின்றீர்களே, அப்போராட்டம் மண்டையன்குழுவின் தலைமையிலா? 

Aucun commentaire:

Enregistrer un commentaire