vendredi 15 février 2013

இந்தியா முதல் முறை போன்று பிழை விடாது இம் முறை நடுநிலை வகிக்க வேண்டும் -ஆனந்த சங்கரி

ஜெனீவாவில் மனித உரிமை பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக மீண்டும் கொண்டு வரப்படும் பிரேரணையில் இந்தியா முதல் முறை போன்று பிழை விடாது இம் முறை நடுநிலை வகிக்க வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். 

இன்று (14) வவுனியாவில் இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவத்தார். 

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், 

கடந்த முறை பிரேரணையை ஆதரிக்க வேண்டும் என தெரிவித்ததுடன் தமிழ் நாட்டையும் தூண்டிவிட்டு அனைவரும் கோசமெழுப்பியதால் இந்திய பிரேரணையை ஆதரித்தது. அதன் விளைவு ஜப்பானை இந்தியாவுக்கு பயந்து ஓரக்கண்ணால் பார்த்த இலங்கை ஜனாதிபதி தற்போது நேராக பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. 

ஜப்பானும் சொல்லியள்ளது உனக்கு என்ன உதவி வேண்டுமோ கேள் தருகின்றேன் என. எங்கெங்கு இராணுவ முகாம் அமைக்க வேண்டுமோ அமைத்துக்கொள்ள அதற்கான உபகரணங்களை தருகின்றேன் எனவும் சொல்லியுள்ளது. 

இதற்கு காரணம் இந்தியா ஆதரிக்காமையே. இந்தியா பொதுவானதாக இருந்தோலேயே நடுநிலைமை வகிக்க முடியும். எனவே இந்தியா இரண்டாம் முறையும் அதே பிழையை விடாது இந்தியா இம்முறை பிரேரணை தொடர்பில் நடு நிலை வகிக்க வேண்டும். 

இல்லையேல் சீனாவை இலங்கை கட்டிப்பிடித்து உறவு கொண்டாடும் நிலை ஏற்படும். சீனாவை கட்டிப்படித்தால் அது எமக்கு ஆபத்தானது. இந்தியில் அங்கு அரசியல் தெரியாது உழற்றிக்கொண்டிருப்பவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். காந்தி 80 ஆண்டுகளுக்கு முன்னரே இலங்கையுடன் நாம் சண்டை பிடிக்க முடியாது என தெரிவித்துள்ளார் என்பதனை சொல்ல வேண்டும். 

தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பை பதிவு செய்வதில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை. இங்கு சுயநலமும் தங்கள் தங்கள் எதிர்காலம் தொடர்பாகவும் பிரச்சினை காணப்படுகின்றது. எல்லாவற்றுக்குளம் முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்கியது நாங்களே. அதற்கு நானே தலைவராகவும் இருந்தேன். பின்னர் கூட்டணி உடைவடைந்ததன் பின்னர் மாவை சேனாதிராஜா தமிழ் செல்வனிடம் சொல்லியே இரண்டாம் தடவையாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 

அப்போது அங்கு முதல் இருந்து மூன்று கட்சிகளுக்கும் தனிச்சின்னம் இருந்தது. எனினும் பொது சின்னத்திற்காக தமிழரசுக்கட்சியின் சின்னத்தை தூசு தட்டி பயன்படுத்தி வருகின்றனர். தன் பின்னர் மக்களும் ஏனையோரும் கேட்டதற்கிணங்கள் நானும் சித்தார்த்தனும் இணைந்துள்ளோம். தற்போது நாம் இணைந்து இரண்டு வருடங்கள் ஈகிவிட்டது. 

சுரேஸ் பிரேமச்சந்திரன், டெலோ, சித்தார்த்தன் பதியவேண்டும் என கேட்கின்றார். நாமும் அவ்வாறே கேட்கின்றோம். ஏனெனில் அவர்கள் எம்மை மட்டம் தட்டி தம்மை வளர்த்துக் கொண்டிருப்பதால். ஆனால் அனைவரும் சம்மதம் தெரிவித்தும் தமிழரசுக்கட்சி மாத்திரம் உடன்படாதுள்ளது. அதற்கு சம்பந்தரும் சோதிராஜாவுமே இடையூராகவும் உள்ளனர். 

அவ்வாறு பதியாது எவ்வாறு எம்மையும் பயன்படுத்தி பணம் சேகரிக்க முடியும். இல்லையேல் எம்மை வெளியில் விடவேண்டும். அவ்வாறெனில் நாம் பதிவு தொடர்பில் கேட்க மாட்டோம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட எமது கட்சியினர் பலர் தேர்தலில் வென்றுள்ளனர். எனவே பதிவதில் என்ன பிரச்சினையுள்ளது என்பது தெரியாது. 

தமிழ் தேசிக் கூட்டமைப்பில் கேட்டவர்களை தமிழரசுக்கட்சியில் இணைத்துள்ளனர். எனவே உண்மையும் விசுவாசமும் இல்லைமையே இதற்கு காரணமாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்வதில் எவ்வித கஸ்டமும் இல்லை. அதன் மூலம் மக்களுக்கு பலம் கூடும், பல ஸ்தானம் கிடைக்கும். என்னையும் சித்தார்த்தனையும் சேவகர் மாதிரி தேனீர் காவுவதற்கே வைத்துள்ளனர். 

திருகோணமலையில் எனது கட்சியில் வெற்றி பெற்றவரை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணியில் இணைத்துள்ளனர். தமிழ் தேசியக்கூட்டமைப்பு உடைந்தபோனால் தம்மை பலப்படுத்துவதற்கான செயற்பாட்டை சிலர் இப்போதே மேற்கொள்கின்றனர். 

ஏன் ஒரே கட்சியாக செய்ற்பட பயப்படுகின்றனர். தந்தை செல்வா தொடங்கிய கட்சி தமிழர் விடுதலைக்கூட்டணி. அதில் வந்து அனைவரும் சேருங்கள். நான் எனது கட்சியை விட்டுத்தருகின்றேன். அதில் வந்து அனைவரும் சேருங்கள். அது தானே தந்தை செல்வாவின் விருப்பமும் கூட என தெரிவித்தார். 

இவ்வாறு ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire