lundi 18 février 2013

இது முன்னரே திட்டமிடப்பட்டிருக்காத ஒரு சந்திப்பு.

திருப்பதி சென்றிருந்த போது, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான றோவின் பணிப்பாளர் அலோக் ஜோசி இந்திய அரசாங்கத்தின் ‘முக்கியமான செய்தி‘ ஒன்றைப் பரிமாறியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

“சிறிலங்கா அதிபரின் பயணத்துக்கு முன்னதாக இடம்பெற்ற சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் புதுடெல்லிப் பயணத்தின் நோக்கம் குறித்து, அண்மையில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இந்தியா சென்றிருந்த போது, இந்தியாவின் தேசிய நாளேடு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. 

சிறிலங்கா அமைச்சர் பீரிசின் அந்தப் பயணம் பல்வேறு இருதரப்பு வர்த்தக உடன்பாடுகள் செய்து கொள்ளப்படுவதற்கான, வழக்கமானதொரு பயணம் தான், என்றே பொதுவான கருத்து நிலவியது. 

ஆனால், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்றை ஒழுங்குபடுத்துவதே, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசின் புதுடெல்லிப் பயணத்துக்கான உண்மையான காரணம் என்று இந்திய நாளேடு தெரிவித்திருந்தது. 

எனினும், சிறிலங்கா வெளிவிவிகார அமைச்சர் பீரிஸ் வெறும் கையுடனேயே நாடு திரும்ப நேரிட்டது. 

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திருப்பதியில், நன்கு பிரபலமான பத்மாவதி விருந்தினர் விடுதியில் சிறப்பு விருந்தினராக தங்கியிருந்தபோது, இந்தியாவின் புலனாய்வுச் சேவை அமைப்பான றோவின் தலைவர் அலோக் ஜோசி, திடீரென அங்கு சென்று சந்தித்தார். 

இது முன்னரே திட்டமிடப்பட்டிருக்காத ஒரு சந்திப்பு. 

ஒரு அரசாங்கத் தலைவருக்கும் இந்தியாவின் சக்திவாய்ந்த இரகசிய சேவை அமைப்பு ஒன்றின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு நிகழ்வது மிகவும் அரிதானது. 

இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம்மிக்கது என்று ஊகங்கள் எழுந்துள்ளன. 

சிறிலங்கா அதிபருக்கும், றோ தலைவருக்கும் இடையிலான சந்திப்பில் பேசப்பட்ட விபரங்கள் இன்னமும் இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளன. 

எனினும், இந்திய அரசாங்கத்திடம் இருந்து முக்கியமான செய்தி ஒன்றை சிறிலங்கா அதிபரிடம் றோ தலைவர் அலோக் ஜோசி பரிமாறியிருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது.” 
இவ்வாறு கொழும்பு ஆங்கிர வாரஇதழ் தெரிவித்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire