dimanche 24 février 2013

திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்: பாதிரியார்கள் விரும்பினால்

Uk-romanகிருஸ்தவ பாதிரியார்கள் விரும்பினால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என இங்கிலாந்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க கர்டினல் கெய்த் ஓ'பிரியன் கூறியுள்ளார். புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் கர்டினல் குழுவில் இடம் பெற்றுள்ள இவர் ஸ்காட்லாந்து நாட்டில் வாழும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் தலைமை பிஷப் ஆக உள்ளார். 'பிரம்மச்சாரிய வாழ்வை சில பாதிரியார்களால் சீராக கடைபிடிக்க முடியவில்லை. எனவே, விருப்பப்படும் பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். கருக்கலைப்பு, கருணைக் கொலை போன்ற மதம் சார்ந்த புனித கொள்கையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக புதிதாக பொறுப்பேற்கவுள்ள போப் முடிவு செய்யலாம். பாதிரியார்கள் திருமணம் செய்து கொள்ளலாமா, கூடாதா என்பது தொடர்பாக இயேசு கிறிஸ்து எதுவும் சொல்லவில்லை. எனவே இவ்விவகாரத்தில் பாதிரியார்கள் பிரம்மச்சாரியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கக் கூடாது. விருப்பப்படும் பாதிரியார்கள் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.' என்று கெய்த் ஓ'பிரியன் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire