vendredi 8 février 2013

தீவிர கண்காணிப்பு இனவாத, மதவாத முறுகல் நிலை ஏற்படாதிருக்க


அரசியல் தலைவர்கள், பொலிஸாருக்கு ஜனாதிபதி பணிப்பு
எவ்வகையான இனவாத, மத வாத முறுகல் நிலைமையும் நாட்டில் எப்பகுதியிலும் இடம்பெறாதிருக்க தீவிரமாக கண்காணிக்குமாறு சகல அரசியல் தலைவர்களுக்கும், பொலிஸாருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார். இன, மத ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி அவர்கள் சகல சந்தர்ப்பங்களிலும் மதத் தலைவர்கள் அரசியல் தலைமைகளுடன் பேச்சு நடத்தி அவர்களது ஆலோசனைகளுடன் தேவையான சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார் என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றும் போது முஸ்லிம்களுக்கும், பெளத்தர்களுக்கும் இடையே நாட்டில் ஆங்காங்கே கலவரங்கள் தலைதூக்க முற்பட்டதாகவும் இது தொடர்பில் அரசு கவனம் செலுத்தவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire