lundi 18 février 2013

மிதிவெடி அகற்றும் பணி நிறைவடைய 10 வருடங்கள் ஆகும்


யாழில் மிதிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைய 10 வருடங்களுக்கு தாமதமாகும் என யாழ். மாவட்ட கண்ணிவெடி செயற்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

வடக்கில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகள் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக அகற்றப்பட்டு வருகின்றன.ஏ-9 வீதியில் முகமாலை மற்றும் பளை பிரதேசத்தில் மிதிவெடிகள் அகற்றும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகின்றது.

விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புக்கள் உள்ளிட்ட மக்கள் நடமாடும் பிரதேசங்களில் மிதிவெடிகள்  அகற்றப்பட்டு அங்கு அச்சமற்ற நிலைமை இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் அந்த இடங்கள் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்படும். 

த ஹலோ ரஸ்ட் மற்றும் டனிஸ் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தின் பணியாளர்கள் மிதிவெடி அகற்றும் பணியை துரிதப்படுத்தியுள்ளனர். இந்த நிறுவனங்களின் கீழ் மிதிவெடிகளை அகற்றும் பணிகளில் பெண்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். 

மிதிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள டனிஸ் நிறுவனம் அவுஸ்ரேலியன் எய்ட் நிறுவனம் ஆகிய உயர் தொழில் நுட்ப சாதனத்தின் மூலம் பணியாளர்களின் உச்ச கட்ட பாதுகாப்பில் மிதவெடி அகற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire