mardi 12 février 2013

வடகொரியாவில் நிலஅதிர்வு அணுவாயுத சோதனையால்


வடகொரியாவில் இன்று காலை உணரப்பட்ட நில அதிர்வுக்கு அந்நாடு மேற்கொண்ட அணுஆயுத சோதனையே காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது. வடகொரியாவில் இன்று காலை 3.9 - 4.5 ரிச்சட் அளவுகளில் நில அதிர்வு உணரப்பட்டது. எனினும் இதற்கான காரணம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் வடகொரியா அணுஆயுத சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சந்தேகம் வெளியிடப்பட்டது.இதன்பின்னதாக வடகொரியாவின் அணுஆயுத சோதனையே அந்நாட்டில் பரவலாக ஏற்பட்ட நில அதிர்வுக்கு காரணம் என அமெரிக்‌க நிலவியல் ஆய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியது.
இறுதியாக வெளியாகிய தகவல்களின் படி வடகொரியா அணுவாயுத சோதனைகளை மேற்கொண்டதாகவும் அதனை வெற்றிகரமாக நிறைவு செய்ததாகவும் அறிவித்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire