samedi 23 février 2013

தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும்: காங்கிரஸ் எம்.பி.க்களிடம் பிரதமர் உறுதி


manmohan-singhஇலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரவிருக்கின்ற தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். தமிழக காங்கிரஸ் எம்.பி.க்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று காலை சந்தித்தனர்.
பிரதமரை சந்திப்பு தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கின்ற தீர்மானத்தை இந்தியா ஆதரவளிக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது தொடர்பாக பிரதமரிடம் நாங்கள் நீண்ட நேரம் பேசினோம். எங்கள் கருத்துக்களை பொறுமையாக கேட்டார்.
‘அடுத்த மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள மாநாட்டில், சென்ற முறை இலங்கைக்கு எதிராக எடுத்த நிலையை தான் இந்த முறையும் மேற்கொள்வோம்’ என்று பிரதமர் உறுதி கூறினார்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிக உரிமையை பெற்றுத் தருவது, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வசிக்கும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்துவது, பறிக்கப்பட்ட அவர்களின் சொத்துகளை உரிமையாளர்களுக்கு திருப்பி வழங்குவது தொடர்பான கோரிக்கைகளையும் இந்தியா வற்புறுத்தும் எனவும் பிரதமர் வாக்குறுதி அளித்தார் என்றும் அவர் சொன்னார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire