mercredi 20 février 2013

தடய ஆய்வில் புதிய தகவல்.பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டது எப்போது? –

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் 2009 மே 19ம் நாள் நண்பகல் அளவில் கொல்லப்பட்டுள்ளதாக தடயவியல் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. 

பதுங்குகுழி ஒன்றில் பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டுள்ளது மற்றும், அவர் சுட்டுக் கொல்லப்பட்டுக் கிடக்கும் காட்சிகள் அடங்கிய நான்கு ஒளிப்படங்களை வைத்து மேற்கொண்ட ஆய்வுகளிலேயே இது தெரியவந்துள்ளதாக சிறிலங்காவில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது. 

இந்த ஒளிப்படங்களின் சுயதரவுகளின் படி, 2009 மே 19ம் நாள் காலை 10.14 மணிக்கும், 12.01 மணிக்கும் இடையில் ஒரே ஒளிப்படக் கருவியால் எடுக்கப்பட்டுள்ளன என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. 

எனவே, பாலச்சந்திரன் மே 19ம் நாள் நண்பகலுக்கு சற்று முன்னதாகவே படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது. 

இது கேள்விக்கிடமின்றி நிறைவேற்றப்பட்ட மரணதண்டனை என்று தாம் உறுதிப்படுத்துவதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

பிரபாகரன் மகன் படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை: சல்மான் குர்சித்விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படையினரால் உயிருடன் பிடித்து வைத்துக் கொல்லப்பட்ட ஒளிப்படங்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் தெரிவித்துள்ளார். 

நேற்று ஊடகங்களில் வெளியான பாலச்சந்திரனின் ஒளிப்படங்கள் குறித்து, இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரால் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்படும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளையமகனின் ஒளிப்படங்களைப் பார்த்தேன். ஆனால் அவற்றின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை.

இலங்கை ஒரு முக்கியமான அயல்நாடு, நண்பன். எல்லாத் துறைகளிலும் இலங்கையுடன் இந்தியா உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. அதேவேளை, மனித உரிமைகள் நிலை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கும் ஆதரவளித்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.                      பிரபாகரன் மக‌ன் ‌வீடியோவை பா‌ர்‌த்த ‌பின்னரே கரு‌த்து தெரிவிக்க முடியும்: ஜெயல‌லிதா

விடுதல‌ை‌ப்பு‌லிக‌ள் அமை‌ப்‌பி‌ன் தலைவ‌ர் ‌பிரபாகரன் மக‌ன் ‌வீடியோவை பா‌ர்‌த்த ‌பின்னரே கரு‌த்து தெரிவிக்க முடியும் என முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர். விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் பிரபாகரன் இராணுவ பாதுகாப்பில் இருந்தபோதே கொலை செய்யப்பட்டதாக செனல்4 ஊடகத்தினால் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து ம‌னித உ‌ரிமைகளை ‌மீ‌‌றிய இல‌ங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜப‌க்ஷவை த‌ண்டி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று த‌மிழக அர‌சிய‌ல் க‌ட்‌சிக‌ள் வ‌லியுறு‌த்‌தி வரு‌கி‌ன்றன. இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் செனல்4 ஊடகத்தினால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படங்கள் குறித்து செய்தியாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டுள்ளனர். இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌‌த்த ஜெயல‌லிதா, ‌பிரபாகரன் மக‌ன் ‌வீடியோவை பா‌ர்‌த்த ‌பின்னரே கரு‌த்து தெ‌ரி‌வி‌‌ப்பதாக கூ‌றியு‌ள்ளா‌ர்.................................இந்திய தூதுவர் பிரசாத் காரியவசம் கூறியுள்ளார். 
பாலச்சந்திரன் கொலை புகைப்பட வெளியீட்டின் பின்னணியில் புலிகள் இயக்கத்தின் ஆதரவு சக்திகள் இருப்பதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,உள்நோக்கத்துடன் லண்டனில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கு பின்னால் புலிகள் ஆதரவு சக்திகள் இருக்கின்றன. மேலும் இந்த குற்றச்சாட்டில் புதிதாக எதுவும் இல்லை. இந்த விவகாரத்தில் மனித உரிமை மீறல் ஏதுமில்லை. இலங்கை அரசு மீது இதுபோன்ற ஆதாரமற்ற குற்றங்கள் கூறுவது வாடிக்கையாகிவிட்டது. என்று அவர் கூறியுள்ளார்.    

பாலச்சந்திரன் இராணுவத்தால் கொல்லப்படவில்லை - முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா!

தான் இராணுவத் தளபதியாக பதவி வகித்த போது பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டதாகவோ, உயிரிழந்துள்ளதாகவோ அல்லது அவரின் சடலம் கிடைத்ததாகவோ எங்கேயும் பதிவாகவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பி. பி. சி. க்குத் தெரிவித்துள்ளார். இதேவேளை தான் தற்போது இராணுவத்தில் இல்லாவிட்டாலும் இராணுவத்தில் இருந்த காலத்தில் இடம்பெற்ற எந்தவொரு விடயம் தொடர்பிலும் சட்ட பூர்மான மற்றும் பக்கச்சார்பற்ற எந்தவொரு விசாரணைக்கும் முகம்கொடுக்கத் தயாராகவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 2009 மே 19 ஆம் திகதி 10 மணிக்கு யுத்தம் நிறைவடைந்தது. ஆனால். அக்காலப்பகுதியில் பாலச்சந்திரன் உயிரிழந்ததாகவோ அவரின் சடலம் கிடைத்ததாகவோ எங்கேயும் பதிவாகவில்லை. பிரபாகரனின் மூத்த மகன் சார்ல்ஸின் சடலம் கிடைத்தது என்பதே உறுதிப்படுத்தப்பட்டது என்றார்.                                                     

Aucun commentaire:

Enregistrer un commentaire