lundi 25 février 2013

1986 சூளைமேடு துப்பாக்கிச் சூடு குற்றப் பின்னணி உள்ள இலங்கை அமைச்சர் இலங்கை அரசே திட்டமிட்டு மேற்கொண்டிருக்கும் யுக்தியே டக்ளஸ் .இந்நிலையில் எச்சரிக்கை என்றும் கருணாநிதி கூறுகிறார்.


திமுக தலைவர் மு கருணாநிதி இலங்கை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில்கள் அபிவிருத்தித் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதியில் ரோலர் மடி வலைகள் பயன்படுத்துவதைக் கண்டித்து படகுப் பேரணி நடத்தவிருப்பதாக எச்சரித்திருப்பதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இன்று திங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் கருணாநிதி நேற்று கச்சத்தீவு திருவிழாவில் கலந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா இலங்கை மீனவர்களை அழைத்து வந்து தமிழகத்திலே சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
உலகின் எந்த நாடுகளிலும் கடல்களின் நடுவே நடைபெறாத அளவிற்கு இலங்கைக் கடல் படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பல ஆண்டு காலமாகத் தாக்கப்பட்டு வருவதும், தமிழக மீனவர்களின் படகுகள் அழிக்கப்பட்டு வலைகள் அறுக்கப்படுவதும், தமிழக மீனவர்கள் பிடிக்கும் மீன்களை பறித்துக் கொண்டு செல்வதும், தமிழக மீனவர்களைக் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு சென்று சிறையிலே அடைப்பதும், ஒவ்வொரு முறையும் இந்திய அரசை இதற்காகத் தொடர்பு கொண்டு தமிழக மீனவர்கள் சார்பில் முறையிடுவதும், இலங்கைக் கடற்படையின் அட்டூழியங்களைக் கண்டிப்பதும் முடிவில்லாமல் வாடிக்கையாக நடந்து வரும் நிகழ்வுகளாகும் இந்நிலையில் உலக நாடுகள் மத்தியில் மஹிந்த ராஜபக்சே அரசின் தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகள் படிப்படியாக வெளிச்சத்திற்கு வருவதை திசை திருப்புவதற்காக இலங்கை அரசே திட்டமிட்டு மேற்கொண்டிருக்கும் யுக்தியே டக்ளஸ் தேவானந்தாவின் எச்சரிக்கை என்றும் கருணாநிதி கூறுகிறார்.
அத்தகைய பேச்சு இந்திய அரசை வலிய வம்புக்கு இழுத்துச் சவால் விடும் பாணியில் அமைந்திருக்கிறது எனும் கருணாநிதி, 1986 சூளைமேடு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை நினைவு கூர்ந்து, கொலைக் குற்றப் பின்னணி உள்ள இலங்கை அமைச்சர் ஒருவர், மீனவர்களாகிய தமிழ் மக்களுக்கு எதிராகப் பேசியிருப்பது சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாததும், கடும் கண்டனத்திற்கு உரியதும் ஆகும் என்று கூறியிருக்கிறார். மேலும் அது குறித்து மத்திய மாநில அரசுகள் உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் திமுக தலைவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இதனிடையே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது தொடர்பான வீடியோக்காட்சிகளும் புகைப்படங்களும் வெளியாகியிருக்கும் நிலையில், போர்க்குற்றங்களுக்காக இலங்கை அரசு மீது பன்னாட்டு விசாரணை வேண்டுமெனக்கோரி சென்னையிலுள்ள இலங்கை துணைத்தூதுவரகம் முன்பு டெசோ அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பெறுமென இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire