dimanche 25 août 2013

அதிக அளவில் உள்ள பொலிவியா நாட்டு கைதிகள் சிறையில் கலவரம்: 29 பேர் பலி

பொலிவியாவில் உள்ள சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. அதுமட்டுமின்றி, பெற்றோர்கள் இருவரும் கைதிகளாக இருக்க நேரிட்டு வேறு உறவினர்கள் இல்லாத குழந்தைகளும் அந்தச் சிறைச்சாலைகளிலேயே வளர அனுமதிக்கப்படுகின்றார்கள்.எனவே, அங்கு எப்போது கைதிகளின் இரு பிரிவினரிடையே கலவரங்கள் தோன்றுவது சகஜமாக காணப்படுகின்றது.  நேற்று, கிழக்கு பொலிவியாவில் உள்ள சாந்தாகுரூஸ் என்ற இடத்தில் உள்ள பால்மசோலா சிறைச்சாலையில் கைதிகளின் இரு பிரிவினரிடையே பெரும் கலவரம் ஏற்பட்டது.
5,000 கைதிகள் உள்ள அந்த சிறைச்சாலையின் ஒரு பகுதியில் இருந்த கைதிகள், மற்றொரு பிரிவிற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களைத் தாக்கியுள்ளனர். அங்கிருந்த எரிபொருள் நிறைந்திருந்த டாங்குகளையும் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
இதில், அங்கு வசித்துவந்த ஒரு குழந்தை உட்பட 29 பேர் பலியானதாகவும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோரில் 35 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சிறை இயக்குனர் ரமிரோ லாநோஸ் தெரிவித்துள்ளார்.
காயமடைந்தவர்களுக்கு ரத்தம் செலுத்துவதற்காக இவர்கள் உள்ளூர் மக்களின் உதவியை நாடியுள்ளனர்.  காவல்துறை தரப்பில் 15 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது..
சிறை அதிகாரிகள் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக உள்ளூர் காவல்துறைத் தலைவர் ஜார்ஜ் அரசினா குறிப்பிட்டுள்ளார். இறந்தவர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகவும், அடையாளம் காணப்படுவதற்காகவும் சவக்கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அந்நாட்டுத் தொலைக்காட்சிகளிலும் இந்த சம்பவம் ஒளிபரப்பப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.

Aucun commentaire:

Enregistrer un commentaire