vendredi 16 août 2013

எகிப்தில் 525 பேர் துப்பாக்கி குண்டுகளுக்கு பலி 3700 பேர் படுகாயம்

எகிப்தில் அதிபராக இருந்த மோர்சியின் ஆட்சியை மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று கூறி அவரது முஸ்லிம் பிரதர்குட் இயக்கத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் தலைநகர் கெய்ரோவில் முகாம்கள் அமைத்து போராட்டம் நடத்தினர். புதிதாக அமைந்த ஆட்சிக்கு எதிராக அவர்கள் பல நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை கைவிடக்கோரி ராணுவம் கேட்டுக்கொண்டது. ஆனால், அதனை மறுத்து போராட்டம் நடத்திய பல்லாயிரக்கணக்கானோரை அப்புறப்படுத்த நேற்று முன்தினம் ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது.இதனையடுத்து இருதரப்புக்கும் மோதல் மூண்டது. மோதல் கலவரமாக மாறியது. இதையடுத்து ராணுவம் அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றது. இந்த கடுமையான மோதலில் இதுவரை 525 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 3700 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பெரும்பாலானோர் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றது. ஆகையால் மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் 3000-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாக மோர்சி ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இருந்தும், மோர்சியின் ஆதரவாளர்கள் அரசு கட்டிடங்களுக்கு தீவைத்து கொளுத்தி வருகின்றனர்.
எகிப்து அரசின் இந்த அடக்குமுறைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து எகிப்துடனான ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire