samedi 10 août 2013

இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளில் இருநூறுக்கும் அதிகமான மொழிகள் அழிந்துவிட்டதாக மொழியியல் ஆய்வு

இந்தியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இருநூறுக்கும் அதிகமான மொழிகள் அழிந்துவிட்டதாக மொழியியல் ஆய்வு நிறுவனம் ஒன்று நடத்திய நாடு தழுவிய மொழிகள் கணக்கெடுப்பு காட்டுகிறது.
தற்போது சுமார் 800 மொழிகள் பேசப்படுவதாக இந்த ஆய்வு காட்டுகிறது.நாடெங்கிலும் இருந்து 85 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் ஒத்துழைப்போடு மூவாயிரத்துக்கும் மேற்பட்ட நிபுணர்கள் சேர்ந்து நான்கு ஆண்டுகள் பணியாற்றி இந்தியாவின் மொழிகள் பற்றிய இந்த சுற்றாய்வை மேற்கொண்டிருந்தனர்.
மொழிகள் வழங்கும் இடம், அவற்றின் சரித்திரம், தோற்றம், இலக்கணம், இலக்கியம், பண்பாடு, கலைவடிவம் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த சுற்றாய்வில் ஆராயப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ அங்கீகாரம் கிடைக்காதது, சமூகங்களின் இடம்பெயர்வு, சமூக பொருளாதார காரணங்களுக்காக பெரும்பான்மையானோரின் மொழியைப் பேச ஆரம்பிப்பது போன்றவை பழங்குடியின மக்களின் மொழிகள் அழிந்துபோக முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire