mardi 6 août 2013

சிகரெட் புகைப்பழக்கத்தை ஒழிக்க பேசும் சிகரெட் பெட்டி : லண்டன் ஆய்வாளர்கள்

சிகரெட் பாக்கெட்டை திறந்தாலே அது, “உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்’ என்ற, வாசகத்தை, புகைப்பவர்கள் கேட்கும் வகையிலான, பேசும் சிகரெட் பாக்கெட்டுகள், பிரிட்டனில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாசகம் லண்டனை சேர்ந்த, ஸ்டர்லிங் பல்கலைக் கழகத்தின், புகையிலை கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய ஆய்வாளர்கள் தான், இந்த பேசும் சிகரெட் பாக்கெட்டை கண்டுபிடித்துள்ளனர். இதில், “சிகரெட் பிடித்தால் உடல்நலத்திற்கு தீங்கானது’ என்ற வாசகம் மட்டுமின்றி, “புகைபிடித்தால், மலட்டுத்தன்மை’ ஏற்படும் என்பது போன்ற வாசகங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. சிகரெட் பாக்கெட்டில் இடம்பெற்றுள்ள தொலைபேசி எண்களை, புகைப்பவர் சுழற்றும் பட்சத்தில், புகைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து, மறுமுனையில் பேசுபவர் விளக்குவார். “இந்த சிகரெட் பாக்கெட் விற்பனைக்கு வந்தால், அது, புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு, ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்’ என, இதனை வடிவமைத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.இளம்பெண்கள் : பிரிட்டனில், இளம் பெண்களில் ஏராளமானோர், புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். இதனால், 16 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இதுகுறித்த ஆய்வு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, சிகரெட் பாக்கெட்டை திறந்ததும் சொல்லப்படும் அறிவுரை, தங்களை சிந்திக்க வைத்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
நிறுவனங்களே… : புகைக்கு அடிமையான பெண்களை, இந்த இழிபழக்கத்திலிருந்து மீட்கும் வகையில், சிகரெட்டை தயாரிக்கும் நிறுவனங்களே, சிகரெட் பெட்டிகளை மிகவும் கவர்ச்சிகரமாகவும், ஒவ்வொரு முறையும், சிகரெட் பாக்கெட்டை திறக்கும்போது, வாசகங்கள் கேட்கும் வகையிலும், இவற்றை தயாரித்துள்ளன என்பது தான் இதன் ஹைலைட். தொழில்நுட்பம் நாம் பிறந்தநாள் கொண்டாடும்போது, மெழுகுவர்த்தியை ஏற்றினால், அதில் வரும் “ஹாப்பி பர்த்தடே டூ யு’ என்பது போன்ற தொழில்நுட்பம் தான், இந்த சிகரெட் பாக்கெட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire