mardi 6 août 2013

வியட்நாம் நாடு விண்ணிற்கு அனுப்பியுள்ள மைக்ரோ செயற்கைக்கோள்

வியட்நாம் நாடு சர்வதேச விண்வெளி மையத்தில் ஒரு சிறிய செயற்கைக்கோளை நிறுவி உள்ளதாக நேற்று வெளிவந்த செய்தி தெரிவிக்கிறது. ஜப்பானின் வர்த்தக விண்கலமான குனோடோரி௪ன் மூலமா பிக்கோ டிராகன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளும், அமெரிக்காவின் 3 செயற்கைக்கோள்களும் விண்வெளி மையத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்த விண்கலத்தைச் சுமந்து செல்லும் எச்௨பி ராக்கெட் சனிக்கிழமை அன்று விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் குறைந்த அளவு சுற்றுப்பாதையில் இந்த ராக்கெட் ஐந்து நாட்கள் பயணம் செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்கோ டிராகன் செயற்கைக்கோள், விண்வெளி சுற்றுச்சூழல் விபரங்கள், பூமியின் படங்கள் மற்றும் சோதனை தொடர்பு அமைப்புகள் போன்றவை குறித்த தகவல்கள் சேகரிக்க அனுப்பப்பட்டுள்ளதாக வியட்நாமின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த செயற்கைக்கோள் இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு விண்வெளி மையத்தில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.  இந்த ஆண்டு மே மாதம், வியட்நாமின் முதல் தொலை உணர்வு செயற்கைக்கோள் விஎன்ஆர்ஈடிசாட்௧ பிரெஞ்ச் கயானாவில் உள்ள கூரௌ தளத்திலிருந்து கோள்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire