vendredi 23 août 2013

சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு தண்டனையாக மரணத்தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் நடவடிக்கை

சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரணத் தண்டனை வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை விரைவில் அமுல்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ச கரலியத்த வலியுறுத்தியுள்ளார்.

கடந்து ஆறுமாதங்களுக்கு முன்னர் இதுதொடர்பில் தான் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பியதாகவும் இந்நிலையிலேயே அதனை தற்போது மீண்டும் வலியுறுத்தியதாகவும் அவர் சுட்டிகாட்டினார்.

சட்டமா அதிபர் திணைக்களம் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கைகளுக்கு தண்டனையாக மரணத்தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் நடவடிக்கைகளை தற்சமயம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய செய்தி குறிப்பிலேயே அவர் மேற்படி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire