mercredi 21 août 2013

சிறிலங்கா வழியாக நுழைந்து மதுரை மீது தாக்குதல் நடத்தத் திட்டம்

சிறிலங்கா வழியாக நுழைந்து தென்னிந்தியாவில் தாக்குதல்களை நடத்துவதற்காக, எட்டுத் தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, மத்திய புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன. 

இதுதொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சின் கீழ் செயற்படும் புலனாய்வு அமைப்புகளில் ஒன்றான, முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பு பிரிவின் இணை இயக்குனர் இம்மாத நடுப்பகுதியில் ஒன்பது பக்க எச்ரிக்கைக் குறிப்பை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளார். 

இவ்வாறு பயிற்சி அளிக்கப்படுபவர்களில் நான்கு பேர் பஞ்சாபிகள் என்றும் ஏனையவர்கள் காஷ்மீரிகளும், பதான்களும் என்றும் அந்த எச்ரிக்கைக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

அவர்களின் தரையிறங்கும் பகுதி யாழ்ப்பாணத்தில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ள ஒரு இடமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை அல்லது மதுரையை குறிவைக்கலாம் என்றும் கருதப்படுவதாக, ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. 

சில மாதங்களுக்குள் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், இந்தியா முழுவதிலும் உயர் விழிப்பு நிலையில் இருக்கும்படி, பாதுகாப்பு முகவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன. 

இந்த தகவல் கிடைத்ததை அடுத்து மும்பை காவல்துறை எல்லா தகவல் மூலங்களையும் உசார்படுத்தியுள்ளது. 

கடந்த பெப்ரவரி 2ம் நாள் சிறிலங்கா அதிகாரிகள் சந்தேகத்துக்குரிய மூன்று பாகிஸ்தானியர்களை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் சிறிலங்கா கடவுச்சீட்டைப் பயன்படுத்தி மும்பை மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளுக்குச் சென்று வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது என்றும் அந்த எச்சரிக்கைக் குறிப்பின் மூன்றாவது பந்தியில் கூறப்பட்டுள்ளது. 

அவர்கள் சிங்கள மீனவர்களின் துணையுடன் கேரளா அல்லது தமிழ்நாட்டினுள் கடல் வழியாக நுழையலாம் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் உள்ளது. 

இந்தியாவில் தாக்குதல் நடத்துவதற்காக பாகிஸ்தானில் எட்டு திவிரவாத சந்தேக நபர்களுக்கு லஷ்கர் இ தொய்பா பயிற்சி அளித்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. 

லஷ்கர் இ தொய்பா, அனைத்துலக பப்பர் கால்சா, ஜய்ஷ் இ மொகமட், ஜமத் உட் தாவா, லஷ்கர் இ ஜாங்வி, அல் உமர் முஜாகுதீன், ஹிஸ்ப் உல் முஜாகுதீன் ஆகிய அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தியாவில் தாக்குதல் நடத்தக் கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பல அமைப்புகளை இந்தியாவைத் தாக்குவற்கான தளமாக சிறிலங்காவைப் பயன்படுத்தலாம் என்றும் அந்த அறிக்கையில் 

Aucun commentaire:

Enregistrer un commentaire