jeudi 15 août 2013

நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து தீப்பற்றியது யாரும் உயிரோடு இல்லை மும்பையிலுள்ள கடற்படைத் தளத்தில்

மும்பையிலுள்ள கடற்படைத் தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நீர்மூழ்கிக் கப்பலொன்று வெடித்து தீப்பற்றியதை அடுத்து அதற்குள் சிக்கியவர்களை காப்பாற்ற மூழ்கித் தேடுபவர்கள் அனுப்பபட்டிருந்த நிலையில், சேதமடைந்து மூழ்கிய அக்கப்பலுக்குள் யாரும் உயிரோடு இருப்பதற்கான அறிகுறி இல்லை என்று தேடியவர்கள் கூறுகின்றனர். இந்தக் கப்பலில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் இரண்டு வெடிப்புகள் நிகழ்ந்த சமயத்தில் அதற்குள் சிப்பந்திகள் 18 பேர் இருந்ததாக இந்திய கடற்படை அதிகாரி டி கே ஜோஷி கூறுகிறார்.அண்மைய காலத்தில் இந்தியக் கடற்படை சந்தித்துள்ள மிகப் பெரிய துயர சம்பவம் இது என இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி வர்ணித்துள்ளார்.
கடற்படையை நவீனப்படுத்தும் இந்தியாவின் திட்டத்துக்கு இந்த நீர்மூழ்கிக் கப்பலின் இழப்பு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire