mardi 13 août 2013

இலங்­கையின் இனங்­க­ளுக்­கி­டையே அமை­தி­யின்மை உரைகளுக்கு தடைவிதிக்க முயற்சி

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒரு­மைப்­பாட்டு அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கா­ர­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள இன, மத நல்­லு­றவைப் பாதிக்கும் உரை­க­ளுக்குத் தடை விதிக்கும் அமைச்­ச­ரவைப் பத்­திரம், அமைச்­ச­ர­வையின் இறுதி அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றதும் சட்­டமா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது. அமைச்­ச­ர­வை­யினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்ள மேற்­படி அமைச்­ச­ரவைப் பத்­திரம் தற்­போது அமைச்­ச­ரவை உப குழு­வொன்­றினால் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றது. அதன் அங்­கீ­காரம் கிடைத்­ததும் அது அமைச்­ச­ர­வையின் இறுதி அங்­கீ­கா­ரத்­திற்­கென மீளவும் சமர்ப்­பிக்­கப்­பட்டு அங்­கி­ருந்து சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வுள்­ளது.
இலங்­கையின் இனங்­க­ளுக்­கி­டையே அமை­தி­யின்மை மற்றும் இணக்­கப்­பா­டின்மை ஆகி­ய­வற்றைத் தோற்­று­விக்கும் வகையில் பகி­ரங்­க­மான முறையில் ஆற்­றப்­பட்டு வரும் உரைகளைத் தடை செய்வதனை வலியுறுத்தியே மேற்படி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire