vendredi 9 août 2013

பாட்டன், முப்பாட்டன்மார் பாதுகாத்து கொடுத்த தாய் நாடாம்;பிரதமர் டி.எம்.ஜயரத்ன

வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை வழங்கு வதானது, வடக்கில் மாநில அரசாங்கம் ஒன்று உருவாக சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுப்பதாகும் என பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகம் ஒன்றை கம்பளையில் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாட்டன், முப்பாட்டன்மார் பாதுகாத்து கொடுத்த தாய் நாட்டை எந்த சந்தர்ப்பத்திலும் இரண்டாக பிரித்து வேறுபடுத்தப் போவதில்லை.
பௌத்த மத தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் 2 ஆயிரத்து 557 வருடங்கள் பேணி பாதுகாத்த இந்த நாட்டை துண்டுகளாக பிளவுப்படுத்த வெளிநாட்டு சக்திகள் உட்பட பல சக்திகள் முயற்சித்து வருகின்றன.
வடக்கு மாகாணத்திற்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குமாறு அரசாங்கத்திற்கு பலவிதமான முறையில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்கம் என்ற வகையில் அந்த கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தினாலும் தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் நிரந்தர சமாதானத்திற்காக அந்த கோரிக்கைகளையும் அழுத்தங்களையும் புறந்தள்ள தயாராக இருக்கின்றோம்.
வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதால், மாநில அரசாங்கம் ஒன்று உருவாக சந்தர்ப்பத்தை பெற்று கொடுத்தாக அமைந்து விடும்.
இந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டால், அந்த மாகாணத்தில் காணிகளின் பயன்பாடுகள் மற்றும் பிரதேசத்தின் பாதுகாப்பு பொறுப்புகள் அவரிடம் சென்று விடும்.
இதன் பின்னர் வடக்கில் தனியான ஆட்சியை அவர்கள் உருவாக்கி கொள்வதுடன், மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் இருந்து விலகி தமது எண்ணத்தின்படி செயற்பட முயற்சிப்பர். இதனை எப்போதும் மறந்து விடக் கூடாது.
நாட்டில் மாநில அரசாங்கம் ஒன்று உருவாகவும் நாட்டை பிளவு படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire