mardi 6 août 2013

கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்மிக்கல்

கந்தரோடையில் கி.மு. மூவாயிரம் ஆண்டுகள் பழமையான அம்மிக்கல்யாழ் கந்தரோடைப் பகுதியில் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள் பயன்படுத்திய அம்மிக்கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனோடு அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மண்சட்டி, பானைகளின் ஓட்டுத் துண்டுகள் மற்றும் கல் மணிகள் என்பனவும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

கொக்குவிலில் அமைந்துள்ள ஆகோள் ஆய்வுமையத்தைச் சேர்ந்த நான்கு அகழ்வு ஆராட்சியாளர்களைக் கொண்ட குழுவினர் கடந்த நவம்பர் மாதம் கந்தரோடைப் பகுதியில் மேற்கொண்ட அகழ்வாராய்சியின் போது இவற்றைக் கண்டு பிடித்தனர்.
கண்டு பிடிக்கப்பட்ட பொருட்களில் அம்மியின் புகைப்படத்தையும் அம்மியின் ஒரு பகுதியையும் சில ஓட்டுத் துண்டுகளையும் எக்காலத்துக்குரியவை என்பதைக் கண்டறிவதற்காக தமிழ்நாடு தஞ்சாவ+ர் தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் அம்மிக் கல் கிறிஸ்துவுக்கு முன் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது. ஓட்டுத் துண்டுகள் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கண்டறியப்பட்டுள்ளன.
இவ் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவரான தமிழியல் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் கலாநிதி nஜ. அராங்கராஜ் இது தொடர்பாகத் தெரிவிக்கையில்,
கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி எமது ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களான சுரேஷ், நெந்தூரன், நடராஜh ஆகியோர் கந்தரோடைப் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டபோது இவ் அம்மிக்கல்லையும் வேறு சில மண் பாத்திர எச்சங்களையும் கண்டெடுத்தோம் என்று தெரிவித்தார்.
தரையிலிருந்து நாலடி ஆழத்தில் தோண்டும்போதே நான்கு கால்களையுடைய இந்த அம்மிக்கல் கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் கல் மணிகள், பானை ஓடுகள், ரோமானியர்களின் நாணயங்கள் இரண்டாயிரத்து 300 ஆண்டுகள் பழமையான சுடுமண்ணினால் செய்யப்பட்ட சீன நாட்டின் பானை ஓடுகள், தாழி ஓடுகள், கறுப்புச் சிவப்புப்பானை ஓடுகள் போன்ற பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
கண்டெடுக்கப்பட்ட அம்மிக்கல் எக்காலத்துக்குரியது என எம்மால் உடனடியாக தெரிந்து கொள்ள முடியவில்லை. இதனால் இதன் புகைப்படத்தினை தமிழ் நாடு தஞ்சாவ+ரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ஆய்விற்காக அனுப்பி வைத்தோம். அங்கு கல்வெட்டுக்கள் மற்றும் தொல்லியல் பேராசிரியர் கலாநிதி மா. பவானி இதனை ஆய்விற்கு உட்படுத்தி இற்றைக்கு மூவாயிரம் (பெருங்கற்காலம்) ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டு பிடித்ததாகவும் தெரிவித்தார்.
இவ் அம்மிக்கல்லின் மாதிரியை இந்தியா, தமிழ் நாட்டில் கொடுமலை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்ட தமிழர்களின் பாரம்பரிய அம்மிக் கல்லுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது அவற்றுடன் இந்தக் கல்லும் ஒத்துப்போவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனாலேயே இவ் அகழ்வாராய்ச்சியின் முடிவை உடனடியாக அறிவிக்க முடியவில்லை. இவ்வாறு முன்னர் கண்டெடுக்கப்பட்ட இவ் அம்மிக்கல்லை ஒத்த அம்மிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் செ.கிருஷ்ணராஜhவிடமும் உள்ளது என்று மேலும் அவர் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire