dimanche 11 août 2013

நீதிதுறை அமைச்சர் நீதி கேட்கும் வெக்கக்கேடு

பள்ளிவாசல்கள் தாக்கப்படும் சம்பவங்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை கவலையளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இத்தகவலை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் ஊடகச் செயலாளர் டொக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்  தெரிவித்தார். இது குறித்து ஏ.ஆர்.ஏ.ஹபீஸ் மேலும் கூறுகையில்,கிரான்ட்பாஸ் சம்பவம் இடம்பெற்ற போது ஹக்கீம் கண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தார். சம்பவத்தை கேள்வியுற்றபின் கிரான்ட்பாஸ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அழைத்து நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார்.
பின்னர் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கிரான்ட்பாஸ் பகுதி பள்ளிக்கு மாத்திரமல்லாது அதனை சூழவுள்ள வீடுகளுக்கும் பாதுகாப்பு அளிக்குமாறு கோரினார்.
அதனை ஏற்றுக் கொண்ட பொலிஸ் மா அதிபர் இச்சம்பவம் குறித்து இன்று (11) காலை சமாதான கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கு ஒழுங்கு செய்யப்படும் என அமைச்சர் ஹக்கீமிடம் உறுதி அளித்துள்ளார்.
மேலும் சம்பவத்தை அடுத்து அமைச்சர் ஹக்கீம் கண்டியில் இருந்து உடனே கொழும்பிற்கு விரைந்தார். ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதால் அவர் கிரான்ட்பாஸ் பகுதிக்குச் செல்லவில்லை.
இன்று சிலாபம் செல்லவிருந்தார். அந்த பயணமும் இரத்து செய்யப்பட்டுள்ளது. கிரான்ட்பாஸ் சம்பவம் குறித்து ஏனைய முஸ்லிம் தலைவர்களுடன், அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire